புதன், 23 ஜனவரி, 2013

" காதல் "...!

 
 
உன் பார்வையில் பதிவாகிய
என் கண்களுக்கு " காதல் "
என்று பெயரெழுது...!
 
 
 
-இளங்கவித்தென்றல் சானியா-

செவ்வாய், 22 ஜனவரி, 2013

இதயம் நான்...!

 
 
முடிவற்ற என் பயணத்திற்கு
முகமறியா பாவை இவள்
முற்றுப்புள்ளி வைக்க - என்
முகவரி தேடுகிறாள்...!
 
காயமின்றி வலிக்க
காதல் ஆயுதம் - தன்
கண்களால் தொடுக்க
கனாக் காண்கிறாள்...!
 
இதயக்கருவறையில் இறுதிவரை
எனைச் சுமக்க மறுக்கிறாள் - அவள்
இதயமே நானெனத் தெரியாமல்...!

-இளங்கவித்தென்றல் சானியா-


வெள்ளி, 18 ஜனவரி, 2013

உன் நினைவின் சுவடுகள்

 
மண்ணின் உன் நினைவின் சுவடுகள்
மனதைக் கீறீக் கிளிக்குதே...
தீயை வளர்க்கும் இரவுகள்
தண்ணீரில் மூழ்க வேண்டுதே...!

கடலுக்குள்ளே உனது குரல் கேட்டு
கரையில் நின்ற கண்கள் நனையுதே
இதயத்துக்குள்ளே இரு பெயரெழுதி
இருதியில் உன்னைக் காணாமல் அலையுதே...!
 
திசைகள் தடுமாறித் தேடினேன்
தேவன் உன் மார்புக்குள் புதையவே
தசைகள் ஆடி நான் ஓடினேன்
ஜீவன் உன்னுயிரை மீட்க்கவே...!
 
மீன்கள் விளையும் வயலிலே
மீனவன் உன்னை மூழுங்குமா...?
கண்ணீரில் கதறிக் கேட்கிறேன்
கருணை காட்டு கடல் தாயம்மா...!
 
 
-இளங்கவித்தென்றல் சானியா-

வியாழன், 6 டிசம்பர், 2012

உனக்காக ஒரு இதயம்செவ்வாய், 13 நவம்பர், 2012

இனிய தீபாவளி...

 
 
 
அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
 
-ILamKavi Designs4you-
 வெள்ளி, 9 நவம்பர், 2012

நீ தான் வேண்டும்...!


 
கவிதையாய் எனை நினைக்கவேண்டும் ...! - என்
கனவுகளை உன் மூச்சாக
சுவாசிக்கவேண்டும் ...!
கணவனாக நீ வரவேண்டும்...! - உனது
கண்களின் பார்வையாக
நானாக வாழவேண்டும்...!
காதல் நீ தான் என உணர்த்த
வேண்டும்...!
காலம் சாகும்வரை ...!


மண்ணில் காதல் மீன்களே


 
விண்ணில் மின்னும் விண்மீன்களை விட
மண்ணில் எனை தின்னும் - உன்
கண்மீன்களே காதலை வென்றதடி...!


Template by:

Free Blog Templates